வியாழக்கிழமைகளில் இறைவழிபாட்டோடு மகான்களின் வழிபாட்டையும் செய்துவருவோம். காரணம் இந்த உலகில் குருவாகத் திகழ்கிறவர்கள் மூலம் அந்த இறைவனின் திருவடியை அடையலாம் என்பது நம்பிக்கை. அதனால்தான் அருணகிரிநாதரும் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று குருவாக வந்து அருளும்படி முருகக் கடவுளை வேண்டினார்.