திமுகவுடன் தினகரன் அணி கூட்டணியா? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2017 (20:26 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு மெஜாரிட்டி இல்லை என்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்று திமுகவும், தினகரன் அணியும் தொடர்ந்து கூறி வருவதால் இருவரும் இணைந்து கூட்டணி ஆட்சி செய்ய வாய்ப்பு உள்ளதாக் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியபோது, ' திமுகவுடன் தினகரன் அணி இணைந்து புதிய அரசு அமைக்க வாய்ப்பு இருப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணிக்கு 98 எம்.எல்.ஏக்களும் தினகரன் அணிக்கு 23 எம்.எல்.ஏக்களும் இருப்பதால் இந்த கூட்டணிக்கு புதிய அரசு அமைக்க தேவையான ஆதரவு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தினகரன் அணியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்குமா திமுக? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
Great TN setback in store: Stalin and TTVD will form a new coalition govt in the next few days