பேருந்து சேவை எப்போது துவங்கும்? கெடுபிடிகள் என்னென்ன??

திங்கள், 11 மே 2020 (13:14 IST)
ரயில் சேவை நாளை முதல் துவங்க உள்ள நிலையில் அடுத்து பேருந்து சேவை எப்போது துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
நாளை முதல் அதாவது மே 12 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்குவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. முதல் கட்டமாக நாஉ முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 15 ரயில்கள் இயக்கப்படுகிறது. 
 
மேலும் இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு துவங்கும். முன்பதிவை ஆன்லைனின் மட்டுமே செய்ய முடியும். இதனைத்தொடர்ந்து தற்போது போக்குவரத்து எப்போது துவங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதபடி உரடங்கு முடிந்த பின் போக்குவரத்து துவங்கப்படும் என தெரிகிறது. எனவே, சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில் ஆகியவற்றை இயக்குவதற்கான நடைமுறைகள் என்னென்னவென திட்டமிடப்பட்டு வருகிறது. 
 
அதன்படி, துசக்கத்தில் குறைந்த பேருந்துகளும், அவற்றில் சமுக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 20 பேர் அமர்ந்தும், 5 பேரும் நின்றும் பயணம் செய்ய தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக தெரிகிறது. 
 
இதேபோல மெட்ரோ ரயிலில் ஒருமுறை 4 பெட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 160 பேரை ஏற்றி செல்வது என்றும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்