சென்னையில் கட்டணமில்லா சேவையை தொடங்கிய உபேர்: குவியும் வாழ்த்துக்கள்

ஞாயிறு, 10 மே 2020 (16:38 IST)
சென்னையில் கட்டணமில்லா சேவையை தொடங்கிய உபேர்
கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அரசுகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பொதுமக்கள், அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலர் தங்களால் முடிந்த அளவு ஆயிரம் ரூபாய் முதல் கோடிக் கணக்கில் வரை நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே அதிகபட்சமாக ரத்தன் டாடா 1500 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஒருசில நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் சார்ந்த உதவிகளை அரசுக்கும் பொதுமக்களுக்கும் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிரபல உலகம் முழுவதும் கிளைகளை கொண்ட உபேர் நிறுவனம் தற்போது சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு இலவசமாக ரைடு செய்யும் சேவையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது 
 
சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக கொரோனாவுக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு கட்டணமில்லாமல் தங்கள் நிறுவனத்தின் வாகனங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது 
 
24 மணி நேரமும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கொரோனாவுக்கு எதிராக பணி செய்து கொண்டிருப்பதால் சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு இந்த சலுகையை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது. எனவே சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அலுவல் காரணமாக எங்கு சென்றாலும் தங்களுடைய உபேர் வாகனத்தை அவர்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. உபேர் நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்