நாளை முதல் அதாவது மே 12ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்குவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. முதல் கட்டமாக இரு மார்க்கத்தில் 15 ரயில்கள் இயக்கப்படும் என்றும், இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று மாலை முதல் தொடங்கவிருப்பதாகவும் அறிவிக்கபட்டுள்ளது
டெல்லியில் இருந்து சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை உட்பட 15 நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், இந்த 15 நகரங்களை இணைக்கும் விதமாக இரு மார்க்கங்களிலும் 30 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு துவங்கும் என்றும், ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்றும் ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்த பின்னரே ரயில்களில் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று மாலை 4 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ஆன்லைனில் மட்டும் முன்பதிவு செய்ய முடியும் என்றும் கவுண்டரில் முன்பதிவு கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் முன்பதிவு செய்த பயண டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது