நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலம் தேறியதால் சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த விஜயகாந்த், இன்று கிறிஸ்துமஸ்சை முன்னிட்டு சென்னை, சைதாப்பேட்டை தேவாயலத்தில் தனது மனைவி பிரேமலதாவுடன் சென்று பிரார்த்தனை செய்தார். பின்னர் தேவாலய வளாகத்தில் தேமுதிக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட விஜயகாந்த், அனைவருக்கும் கேக் வழங்கி கிறிஸ்துமஸ்சை கொண்டாடினார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் ஆர்.கே.நகரில் அதிமுக வின் தோல்விக்கு திமுக தான் காரணம் எனக் கூறுவது வழக்கமான புலம்பல் என்றார்.