தமிழ்நாடு பாவம்யா: வருத்தப்பட்ட வித்யாசாகர் ராவ்!

ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (17:50 IST)
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கடந்த ஒரு வருடமாக இருந்த வித்யாசாகர் ராவ் நேற்று மாற்றப்படு முழு நேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அரசியல் சூழலில் தமிழகம் பாவம் என வித்யாசாகர் ராவ் தனது நட்பு வட்டாரத்தில் கூறியதாக தகவல்கள் வருகின்றன.


 
 
பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டதுக்கு பின்னணியில் பகீர் காரணம் ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது.
 
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்த வித்யாசாகர் ராவ் தமிழக சட்டமன்றத்தை முடக்க திட்டமிட்டிருந்ததாக டெல்லிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமும் அவர் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
 
வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது கடும் கோபத்தில் இருந்ததால் எந்தவித சமாதானத்துக்கும் அவர் உடன்படவில்லை என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் 18 எம்எல்ஏக்கள் தகுநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் எதிர் கட்சிகளால் ஆளுநரும் விமர்சிக்கப்பட்டார்.
 
இதனால் தனது பெயர் தேவையில்லாமல் டேமேஜ் ஆவதை விரும்பாத வித்யாசாகர் ராவ் தனது முடிவான தமிழக சட்டமன்றத்தை முடக்குவதை செயல்படுத்திவிடுவார் என அஞ்சி தான் டெல்லி மேலிடம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தமிழக பொறுப்பு ஆளுநர் பொறுப்பிலிருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டு பன்வாரிலால் புரோஹித் புதிய முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இந்த அறிவிப்பு வந்த நேரத்தில் வித்யாசாகர் ராவ் தனது நண்பர்கள் வட்டாரத்தில் தமிழ்நாடு பாவம்யா என கூறி வருத்தப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. வர இருக்கும் ஆளுநர் தமிழக அரசையும், ஆளும் தரப்பையும், மத்திய அரசையும், எதிர்க்கட்சிகளையும், அதிமுக அதிருப்திகளை எப்படி கையாள போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அவருக்கும் இந்த ஆளுநர் பொறுப்பு சவாலாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்