கோவையில் தொழில்கள் நசிவு: கொங்கு மண்டலம் முதலமைச்சரை மன்னிக்காது.. வானதி சீனிவாசன்

Siva

ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (07:30 IST)
கோவையில் தொழில்கள் நசிந்து வருவதை வேடிக்கைப் பார்க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என்றும், கொங்கு மண்டலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மன்னிக்காது என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் முக ஸ்டாலின் வர்கள் 'ஜி.எஸ்.டி. குறித்த தொழிமுனைவோரின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தவரை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று” என்று கூறியிருக்கிறார்.
 
கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் தொழில்கள் நசிந்து வருவதை அறிந்து
அதை காப்பற்றவே நிர்மலா சீதாராமன் கோவை வந்தார். ஆனால், அவரது
முயற்சிகளுக்கு திழக அரசு எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. அதற்கு நேர்மாறாக பிரச்னையை திசைதிருப்பி, மத்திய நிதியமைச்சர் செய்த நல்ல செயல்களை மக்களிடம் இருந்து மறைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார்.
 
திமுக அரசின் அபரிமிதமான யின் கட்டண உயர்வாலும், சொத்துவரி, பதிவு கட்டண உயர்வாலும் 30 சதவீத குறு, சிறு. நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, கோவையின் மக்கல் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற முறையில் மத்திய நிதியமைச்சருடன், தொழில்முனைவோர்கள் தேரடியாக சந்திக்கும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தேன். தொழில்முனோர்கள் ஒவ்வொருவரும் தெர்வித்த கோரிக்கைகள் ஆலோசனைகளை நிர்மலா சீதாராமன் பொறுமையுடன் கேட்டு பதிலளித்தார்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்