சுரங்கபாதை மழை வெள்ளத்தில் நீச்சல் முயற்சி! பெரியவர் பரிதாப பலி!

Prasanth Karthick

சனி, 12 அக்டோபர் 2024 (16:27 IST)

சிவகங்கை மாவட்டத்தில் சுரங்க பாதையில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டத்திலும் நேற்று பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதில் காரைக்குடி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. பக்கத்து ஊர்களுக்கு செல்ல முக்கியமான அந்த 12 அடி சுரங்கபாதை தண்ணீரில் மூழ்கியதால் மக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

 

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்து 51 வயதான பீட்டர் என்பவர் பக்கத்து கிராமத்திற்கு செல்ல வேண்டி அந்த சுரங்க பாதையை நீந்தி கடக்க முயன்றுள்ளார். ஆனால் சுரங்கபாதைக்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பாத நிலையில் அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

சம்பவ இடம் விரைந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு சுரங்கப்பாதையில் இருந்து பீட்டரை பிணமாக கண்டுபிடித்து மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்