திருச்சி அருகே காரைப்பட்டி முதல் வேலக்குறிச்சி வரை 44 லட்ச ரூபாய் மதிப்பில் 2 கிலோ மீட்டர் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. அப்போது அங்கு வேறு சில நலத்திட்டங்களை மேற்பார்வை இடுவதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வருகைதந்தார். அப்போது அவர் புதிதாக போடப்படும் சாலை தரமானதாக உள்ளதா நோண்டிப்பார்த்து சோதனை செய்தார்.