சென்னையில் நள்ளிரவில் திடீரென போராட்டத்தில் குதித்த போக்குவரத்து ஊழியர்கள்

புதன், 28 மார்ச் 2018 (07:39 IST)
நேற்று நள்ளிரவு பேருந்தில் ஏறிய இரண்டு நபர்கள் டிக்கட் எடுக்க மறுத்ததோடு, அவர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கியதால் 70க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றிரவு சென்னை பிராட்வேயிலிருந்து தாம்பரத்திற்கு சென்ற 21G பேருந்தில் ஏறிய இரண்டு பேரிடம் நடத்துனர் டிக்கட் வாங்க கூறியிருக்கிறார். மதுபோதையில் இருந்த இருவரும் டிக்கட் வாங்க மறுத்ததோடு, நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து தாக்குதலில் காயமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையறிந்த போக்குவரத்து ஊழியர்கள் 70க்கும் மேற்பட்டோர், சம்மந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், போதை ஆசாமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்