இரண்டு நாளுக்கு ஸ்ரைக்: பேருந்துக்கும் பணத்துக்கும் திண்டாடும் மக்கள்?

திங்கள், 7 ஜனவரி 2019 (20:11 IST)
ஜனவரி 8 மற்றும் 9 ஆம் தேதி மத்திய அரசின் சில புதிய நடைமுறைகளை கைவிடும்படி வலியுறுத்தியும் 12 அம்ச கோரிக்கைகலை முன்வைத்தும் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. 
 
அதாவது, மத்திய அரசின் பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற கோரியும், பொதுத்துறைகளின் பங்கு விற்பனைகளை கைவிட வலியுறுத்தியும் இந்த வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. 
 
இந்த வேலை நிறுத்தத்திற்கு மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் என பல்வேறு சங்கங்களில் உள்ளவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 
குறிப்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம், போக்குவரத்து, மின்வாரிய சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 
 
இதனால், போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சென்னையில் உள்ள 33 பஸ் டிப்போக்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளையும் மறுநாளும் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகல் இயங்குமாம். 
 
அதேபோல், அரசு பணிகள் கடுமையாக பாதிக்கும், வங்கி சேவைகள் பெரிதளவில் முடங்கும். இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடும் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்