தமிழகத்தில் கடந்த மாதம் நவம்பர் 26 ஆம் தேதி 12 டெல்டா மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப்போட்டது. இதில் தஞ்சாவூர். திருவாரூர் நாகபட்டினம் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மக்கள் பலர் விவசாய நிலங்கள், வீடு, உட்பட அனைத்தையும் இழந்தனர்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று கூடிய உயர்மட்ட குழு கூட்டத்தில் கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.1,146.12 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.இந்த நிதி தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ஒதுக்கியுள்ளதாகவும் தெரிகிறது.