பொங்கல் மற்றும் தீபாவளி ஆகியப் பண்டிகைகளின் போது சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் வேலை செய்யும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அது போன்ற நேரங்களில் சென்னையில் இருந்து அந்தந்த ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் அரசால் இயக்கப் படுகின்றன. ஆனாலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் சென்னைக்கு செல்வதற்குள்ளாகவே இரண்டு மணி நேரம் ஆகிவிடும். அந்த அளவுக்கு போக்குவரத்து செரிசல் ஏற்படும்.
மாதவரம் – ஆந்திரா வழியாக செல்லும் பேருந்துகள்
கே.கே. நகர் – ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழியாக செல்லும் பேருந்துகள்
தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம் –விக்கிரவாடி, பன்ரூட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்
பூவிருந்தவல்லி – வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள்
கோயம்பேடு – மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும்.
இந்த சிறப்புப் பேருந்துகள் அனைத்தும் ஜனவரி 11,12,13,14 ஆகிய நான்கு நாட்களில் செயல்படும்.