மோடி நின்ற இடத்தில் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்: களைகட்டும் மாமல்லபுரம்

ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (10:52 IST)
இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகிய இருவரும் கடந்த 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிட்டனர். மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய இடங்களில் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது
 
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் இரு தலைவர்களின் வருகையை அடுத்து கடந்த ஒரு மாதமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை இன்று முதல் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து சுற்றுலா பயணிகள் இன்று மாமல்லபுரத்தில் குவிந்து வருகின்றனர்.
 
அதுமட்டுமின்றி மோடி மற்றும் ஜி ஜிங்பிங் புகைப்படம் எடுத்துக்கொண்ட இடங்களைத் தேடி தேடி பார்த்து அதே இடத்தில் குரூப் போட்டோக்கள் மற்றும் செல்பி போட்டோக்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் எடுத்த இந்தப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 
 
மோடி-ஜிங்பிங் புகைப்படங்களையும் அதே இடத்தில் தாங்கள் எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் வெண்ணெய் உருண்ட பாறை அருகே கூட்டம் கூட்டமாக சிறுவர், சிறுமியர் நின்று இந்த இடத்தில்தான் மோடியின் ஜி ஜிங்பிங்கும் கைதூக்கி போஸ் கொடுத்தனர் என்று ஜாலியாக விளையாடி வருகின்றனர். மோடி, ஜி ஜிங்பிங் வருகையை அடுத்து இன்னும் சில நாட்களுக்கு மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்