தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை

திங்கள், 18 டிசம்பர் 2023 (19:49 IST)
அதிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி, நெல்லை ஆகிய 2 மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை இரு மாவட்டங்களுக்கும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் தொடர்வதாகவும்,  கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிகனமழையும், 33 இடங்களில் மிக கனமழையும், 12 இடங்களில் கனமழையும் பெய்துள்ளதாக வானிலை மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி, நெல்லை ஆகிய 2 மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ''அதிகனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும்    நாளை (டிசம்பர்19)  பொதுவிடுமுறை அறிவித்து'' தமிழ்நாடு அரசு  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்