இன்று திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிக்கவுள்ளார். ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர் திமுக தலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி தலைவராக இருந்தவரை ஸ்டாலின் உள்பட எத்தனையோ கோஷ்டிகள் திமுகவில் இருந்தாலும் அனனவரையும் அரவணைத்து சென்றார். ஆனால் இன்று அந்த கோஷ்டிகளில் ஒருவரான ஸ்டாலின் தலைவரானபோதிலும், அவருடைய தலைமையை கட்சியில் யாரும் எதிர்க்கவில்லை என்பது நல்ல விஷயமே
அடுத்ததாக திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய சூழல். குறிப்பாக கருணாநிதியின் தொகுதியான திருவாரூரில் தோல்வி அடைந்தால் அது கட்சிக்கு மிகப்பெரிய அவமானகரமான விஷயமாக போய்விடும்.