ஓட்டு கேட்டு வந்த காங்கிரஸ் வேட்பாளரை செருப்பால் அடித்த பெண்

திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (22:47 IST)
கர்நாடகாவில் நாளை மறுதினம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்கு சேகரிக்கும் இறுதிக்கட்ட முயற்சியில் காங்கிரஸ், பாஜக, மதஜ தள கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் கொப்பள் மாவட்டத்தில் உள்ள குஷ்டகி என்ற நகரசபையின் 20வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் தம்மண்ணா என்பவர் போட்டியிடுகிறார். எனவே அந்த வார்டுக்குட்பட்ட பகுதியில் அவர் இன்று காலை முதல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 
 
அப்போது, ஏற்கனவே வெற்றி பெற்று மக்களை மோசம் செய்து விட்டதாகக் கூறி, அவரிடம் ஒரு பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் அந்த பெண் திடீரென தனது காலில் இருந்த செருப்பை கழட்டி ஓட்டு கேட்க வந்த தம்மண்ணாவை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்