இந்த நிலையில் காய்கறி, மளிகை மற்றும் மருந்து பொருட்கள் அனைத்தும் மூடப்பட்டு ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்களின் உணவுத் தேவையை கருத்தில் கொண்டு உணவகங்கள் மட்டும் இயங்கலாம் என்றும் அதுவும் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
இந்த நிலையில் ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனங்களான ஜொமைட்டா, ஸ்விக்கி உள்பட ஒரு சில நிறுவனங்கள் தங்களுக்கு உணவு டெலிவரி செய்ய அனுமதி தர வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தன. இந்த நிலையில் இதுவரை இந்த நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில் தற்போது ஒரு நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது
இதன்படி காலை 7.00 மணி முதல் 9.30 மணி வரையிலும் மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் ஸ்விக்கி, ஜொமைட்டோ நிறுவனங்கள் உணவுகளை டெலிவரி செய்யலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னை உள்பட பெருநகரங்களில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் தேவையான உணவுகளை பெற்று கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது