தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! – இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

திங்கள், 4 அக்டோபர் 2021 (09:55 IST)
நவம்பர் மாதம் தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக தீபாவளி கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டும் தமிழக போக்குவரத்து துறையின் அரசு விரைவு பேருந்துகள், ஏசி பேருந்துகள், சொகுசு பேருந்துகள் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவுகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்