வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெற்று நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று நள்ளிர்வில் இருந்து காலை வரை மிக அதிக கனமழை பெய்தது.
இந்நிலையில் வட தமிழகத்தில் அதிகபட்ச மழை பெய்த பகுதிகளின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் அதிகபட்சமாக 30 செ.மீ வரை மழை பெய்துள்ளது. ஆவடியில் 26 செ.மீ மழையும், தாமரைப் பாக்கம் மற்றும் பொன்னேரியில் 16 செ.மீ மழையும், கும்முடிப்பூண்டியில் 9.5 செமீ மழையும், ஊத்துக்கோட்டையில் 9.3 செமீ மழையும் பெய்துள்ளது.