அவர்கள் வெளிப்படையாக பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரோடும் சங்கராச்சாரியாரோடும் தொடர்பு வைத்துக்கொண்டே, அவர்கள் வகுத்துத் தரும் வேலைத்திட்டத்தின் படி செயல்பட்டு வருகின்றனர். அந்த சனாதன அற்பர்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பெயரையும் பாட்டனார் ரெட்டமலை சீனிவாசன், பண்டிதர் அயோத்திதாசர் ஆகியோரின் பெயரையும் பயன்படுத்திப் பிழைப்பு நடத்துகின்றனர். அந்தக் கும்பலைத்தான் மேலவளவு நிகழ்வில் கண்டித்தேன்.