ஜக்கி வாசுதேவுக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள் - ஈஷா யோக மையம்

புதன், 14 ஏப்ரல் 2021 (15:37 IST)
தமிழகத்தில் உள்ள கோயில்களைக் காக்க வேண்டுமனக் குரல் கொடுத்துவந்த ஈஷா யோக மையம் அமைப்பின் நிறுவனர் ஜக்கி வாசுதேவுக்கு எதிராக அவதூறு பரப்படுகிறது என அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
 

தமிழகத்தில் உள்ள கோயில்களைக் காக்க வேண்டுமன ஈஷா யோக மையம் அமைப்பின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குரல் கொடுத்து வந்தார்.அவருக்கு ஆதரவாக நடிகர்,நடிகைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் குரல் கொடுத்தனர்.

அதேசமயம் அவருக்கு எதிராக எதிர்ப்புகளும், விமர்சனங்களும் அதிகரித்தது. இதுகுறித்து ஈஷா யோக மையம் அமைப்பினர் கூறியுள்ளதாவது: ஜக்கிவாசுதேவ் மீது அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறுவது கண்டிக்கத்தக்கது. ஈஷா யோக மையத்தின் செயல்பாடுகளை முடக்க வேண்டுமென மதவாத மற்றும் தேசவிரோத அமைப்புகள் சதி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்