அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இதில், ஆத்திரமடைந்த இளைஞர் அருகில் நின்றிருந்த அரசுப் பேருந்தின் கண்ணாடியைக் கையால் உடைத்தார்.
இதுகுறித்து, போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் விரைந்து, சம்பவ இடத்திற்கு வந்து, இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த இளைஞர், தான் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்தவர்; தற்போது, ஒரு பாலிடெக்னிக்கல்லூரியில் படித்து வருவதாகவும் கூறினார்.
இதுகுறித்து, அப்போக்குவரத்துக் கழகம் புகாரளித்ததை அடுத்து, போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.