வடசென்னைக்கு 3 வது முறையாக வருகிறேன். தேர்தலுக்காக வருபவர்கள் நாங்கள் அல்ல. இந்த உச்சி வெயிலில் உற்சாகம் அளித்த தொண்டர்களை பார்க்கும்போதே நாம் வெற்றி பெறுவோம் என்று தெரிகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி நாம் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு என்று பேசினார். மேலும், கடந்த முறை ஒன்றாக வந்த எதிரிகள் இம்முறை தனிதனியாக பிரிந்து வருகின்றனர். கடந்த முறை 4.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். தற்போது 6 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.