தீபாவளிக்கு களைகட்டிய டாஸ்மாக் விற்பனை! – 2 நாட்களில் இவ்வளவு வசூலா?

திங்கள், 13 நவம்பர் 2023 (11:24 IST)
தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையில் டாஸ்மாக் விற்பனை களைகட்டியுள்ளது.



பொதுவாகவே பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருப்பது வழக்கம். இந்த முறை தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் புதிய ப்ராண்ட் பீர் பானங்களும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் வசூல் ரூ.467.69 கோடி கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நவம்பர் 11ம் தேதி அன்று ரூ.221 கோடிக்கும், தீபாவளி நாளான நவம்பர் 12ம் தேதியன்று ரூ.246 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்