டாஸ்மாக் கடைகளில் புதிய பிரீமியம் பிராண்ட் பீர்கள் !

செவ்வாய், 31 அக்டோபர் 2023 (19:51 IST)
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பிற மாநில தயாரிப்பு பிரீமியம் பிராண்டுகள் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு டாஸ்மாக் இயங்கி வருகிறது. இந்த நிலையில், நல்ல பிராண்ட்  பீர் வேண்டும் என மதுபிரியர்கள் புகார் அளித்து வந்தனர்.

இந்த  நிலையில், பீர் பிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரா, கைஸ்ட், காட்பாதர், தண்டர்போல்ட் உள்ளிட்ட பிற மாநில தயாரிப்பு பிரீமியம் பிராண்டுகள் டிசம்பர் முதல் டாஸ்மாக்கில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும் ஹன்டர், வுட்பெக்கர், பவர்கூல் பிராண்டுகல் நவம்பர் மாதம் முதல் டாஸ்மாக்கில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்