இந்த கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத்தில் பேச வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் அதுகுறித்தும், திமுகவினர் வேளாண் சட்டங்கள் குறித்தும், ஆளுனரிடம் அளித்த ஊழல் பட்டியல் குறித்தும் கேள்வி எழுப்பினால் அமளி ஏற்படும் என்பதால் அதுகுறித்தும் ஆலோசனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.