இந்நிலையில் இன்று டெல்டா மாவட்டங்கள், கடற்கரையோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் இன்றும், நாளையும் நாகப்பட்டிணம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், புதுச்சேரி மற்றும் காரைகாலில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.