குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி!

சனி, 23 ஜூலை 2022 (14:25 IST)
குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிவி ரமணா உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசிடம் சிபிஐ அனுமதி கேட்டிருந்தது 
 
இந்த நிலையில் சிபிஐக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் ஆக வாய்ப்பு இருப்பது என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
முன்னாள் அமைச்சர்களான சி விஜயபாஸ்கர் மற்றும் பிவி ரமணா ஆகிய இருவருமே தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்