பொன் மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (19:23 IST)
சிலைகடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொன் மாணிக்கவேல் நியமத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
முன்னாள் ஐஜி . பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற்ற நிலையில்இன்னும் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றம் நியமித்திருந்தது.
இந்நிலையில் சிலைகடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்க வேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் தற்போது மேல்முறையீடு செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.