அதுமட்டுமின்றி வார ஊக்கத்தொகையும் நிறுத்தி உள்ளதாக கூறப்படுவதால் ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஸ்விக்கி நிறுவனத்தின் புதிய விதிமுறைகளை கண்டித்து சென்னையில் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அரசு தலையிட வேண்டும் என்றும் புதிய விதிமுறைகள் ஊழியர்களுக்கு எதிராக உள்ளது என்றும் ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்