இதனையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு பதிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் 13ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது யூடியூபர் மாரிதாஸ்க்கு எதிரான தமிழக போலீஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.