தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இந்நிலையில் பதவியேற்பு விழா எப்போது என்பது அனைவரின் கேள்வியாக இருந்த நிலையில் இப்போது வரும் 7 ஆம் தேதி ஸ்டாலின் ஆளுனர் மாளிகையில் மிக எளிமையாக முதல்வராக பதவியேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக நாளை திமுக எம் எல் ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.