தமிழகத்தை ஆள உங்கள் ஆலோசனை தேவை! – எடப்பாடியாருக்கு மு.க.ஸ்டாலின் பதில்!

திங்கள், 3 மே 2021 (11:35 IST)
தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு பதிலளித்துள்ளார் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற திமுக விரைவில் ஆட்சியமைக்க உள்ளது. திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறும் நிலையில் கவர்னர் மாளிகையில் விரைவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி பிரமாணம் ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள மு.க.ஸ்டாலின் “மாண்புமிகு  எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை! ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்!” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்