முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி மற்றும் கேபி அன்பழகன் ஆகிய 6 பேர் நேற்று சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து 2 மணி நேரம் பேசியதாகவும், அப்போதுஅதிமுகவின் தொடர் தோல்வி கட்சிக்கு நல்லதல்ல, இந்த தோல்வி தொடர்ந்தால் கட்சிக்காரர்கள் யாரும் வேலை செய்ய மாட்டார்கள், எனவே உடனடியாக தாமதம் செய்யாமல் பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று குரல் கொடுத்ததாக தெரிகிறது.
குறிப்பாக ஓபிஎஸ், சசிகலா, தினகரன் அனைவரையும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்றும் ஒன்றிணைந்த அதிமுக இருந்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் வெற்றி பெறும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி இடம் கூறி இருக்கிறார்கள்.