இதை தொடர்ந்து இந்த வாட்ச் விவகாரம் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வாட்ச் விவரங்களை வெளியிடும்போது, திமுக தலைவர் ஸ்டாலினின் சொத்து விவரங்களையும் வெளியிடுவேன் என பேசியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள செந்தில் பாலாஜி “பில் இருக்கிறதா? இல்லையா என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறோம். ஆம்/இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும்? ஏப்ரலில் பட்டியல் வரும்…மே மாதம் வெய்யில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால் அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்…கோழி கொக்கரக்கோன்னு… என்பது போலவே இருக்கிறது” என்று கூறியுள்ளார்.