மதுரையில் எய்ட்ஸ் மருத்துவமனை - செல்லூர் ராஜூ அட்ராசிட்டிஸ்

வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (11:53 IST)
மதுரையில் எய்ம்ஸ் மருத்துமனை என்பதற்கு பதில் எய்ட்ஸ் மருத்துவமனை என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிய வீடியோ சமுக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.

 
அணையில் உள்ள நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாக்கோல் விட்டு தமிழ்நாட்டையே சிரிக்க வைத்தவர் அமைச்சர் செல்லூர் ராஜூ. அன்று முதல் அவரை பலரும் தெர்மாக்கோல் எனும் அடைமொழியிலே அழைத்து கிண்டலடித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு மேடையில் அவர் பேசும்போது ‘முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரைக்கு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதுபோல தற்போது எய்ட்ஸ் மருத்துவமனையும் அவர் கொண்டு வந்துள்ளார்’ என அவர் பேசினார். அதாவது, எய்ம்ஸ் மருத்துவமனை என்பதற்கு பதிலாக எய்ட்ஸ் மருத்துவமனை என மீண்டும் மீண்டும் அவர் பேசியது கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்