தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இந்து கோயில்களுக்கு முன் உள்ள பெரியார் சிலை அனைத்தும் அகற்றப்படும் என்றும், இந்து அறநிலையத்துறை கலைக்கப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்ததை அடுத்த இதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார்.
அதேபோல் அமைச்சர் சேகர்பாபு இது குறித்து கூறிய போது திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை நாத்திகர்கள், ஆத்திகர்கள் என்று பாகுபாடு கிடையாது என்றும் பெரியார் சொன்ன நல்ல கொள்கைகளை ஏற்றுக் கொள்வோம் இந்து மதத்தில் உள்ள நல்ல கொள்கைகளையும் ஏற்றுக் கொள்வோம் என்றும் கூறினார்.