கஜா எதிரொலி: தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

திங்கள், 19 நவம்பர் 2018 (08:09 IST)
கஜா புயல் எதிரொலியாக இன்று  தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. 
 
பேயாட்டம் ஆடிய கஜாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர். 1000க் கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 50 க்கும் மேற்பட்ட மனிதர்கள் உயிரிழந்துள்ளனர்.
 
பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களும், வாழை மரங்களும், பனை மரங்களும் வேரோடு சாய்துள்ளன. விவசாயிகள் கஷ்டப்பட்டு வட்டிக்கு கடன் வாங்கி பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் கஜாவால் சீரழிந்து போயுள்ளன. மீட்புப்பணிகளை மேற்கொள்ள அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் திருவாரூர், தஞ்சை, கொடைக்கானல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்தும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும் அந்தத்ந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்