வாலிபருடன் உல்லாசமாக இருக்கும் ஆசிரியை ; வெளியான வீடியோ : ஓசூரில் அதிர்ச்சி

செவ்வாய், 30 ஜனவரி 2018 (11:41 IST)
வாலிபருடன் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
கிருஷ்ணகிரி மாவட்டம் நெல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 45 வயது ஆசிரியை ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அந்த பள்ளியில் 168 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், அதேபகுதியில் உள்ள ஒரு தக்காளி மண்டியில் பணிபுரியும் வாலிபர் ஒருவருடன், அந்த ஆசிரியை நெருக்கமாக உள்ள வீடியோ சமீபத்தில் யூடியூப்பில் வெளியானது. மேலும், அந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் அந்த ஆசிரியை அமர்ந்திருக்கும் வீடியோவும் அதில் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 15 வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாக கூறும் அந்த வாலிபர் கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் யுடியூப்பில் ஒவ்வொன்றாக வெளியிட்டு வந்துள்ளார்.
 
இந்த வீடியோவில் பேசும் வாலிபர், வாட்ஸ் அப் மூலம் அந்த ஆசிரியை தனக்கு பழக்கமானதாகவும், தானும், அந்த ஆசிரியையும் ஒசூர், ராயக்கோடை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்ததாக கூறியுள்ளார். அந்த வீடியோவில், பேருந்தில் அவர்கள் இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படமும் உள்ளது.
 
இந்த வீடியோவை பார்த்த ராயக்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று அந்த பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும், அந்த ஆசிரியையை தாக்கவும் முயன்றனர். ஆனால், போலீசார் அதை தடுத்து, அவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். 
 
விசாரணையில், அந்த ஆசிரையையுடன் நெருக்கமாக இருந்த புகைப்படைத்தை வைத்து அந்த வாலிபர் தொடர்ந்து பணம் பறித்து வந்துள்ளார். மேலும், பல லட்சங்களை கேட்டு மிரட்டியுள்ளார். அதைக் கொடுக்காததால் அந்த வாலிபர் அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
 
அந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். அதேபோல், அந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்