இந்த நிலையில் அந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், வீட்டுப் பாடம் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த வகுப்பு ஆசிரியர் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் அந்த சிறுமியின் மேலாடையை அவிழ்க செய்துள்ளார்.
ஆசிரியரின் இந்த செயலை அறிந்த சிறுமியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் அந்த புகாரை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து பள்ளி ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.