சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில், தான் இடம்பெறாத அமர்வு முன் மனுவை பட்டியலிடுமாறு, தலைமை நீதிபதிக்கு கோப்புகளை நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக பெண் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அட்துமட்டுமின்றி மொத்தம் 7 வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கரை குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்ட்டிருந்தார்.