இதனையடுத்து நடராஜன் தரப்பு அவரது உடல்நிலையைக் காரணம் காட்டி கீழ் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றமும் அவருக்கு விலக்கு அளித்தது. இதனை காட்டி சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமின் கோரியிருந்த சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.