சசிக்கலா உடல்நிலை சீராக உள்ளது.. நலமாக உள்ளார்! – மருத்துவமனை அறிக்கை!
வெள்ளி, 29 ஜனவரி 2021 (10:34 IST)
கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிக்கலா உடல்நலம் சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலை செய்யப்பட சில நாட்களே இருந்த நிலையில் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் குணமடைந்து உள்ளதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று திடீரென சசிக்கலாவிற்கு ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.