நீரிழிவு நோய்க்கெல்லாம் இட ஒதுக்கீடா.. மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்..!

செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (17:33 IST)
தனக்கு நீரிழிவு நோய் இருப்பதால் மருத்துவ படிப்புக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மாணவி ஒருவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
 
அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உள்பட பல காரணங்களுக்காக மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என்பதை தெரிந்ததே. இந்த நிலையில் மாணவி ஒருவர் தனக்கு நீரிழிவு நோய் இருப்பதால் எம்பிபிஎஸ் பாடத்தில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்
 
நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த அந்த மாணவி நேரிழிவு நோய் என்ற கோரிக்கையை எடுத்திருந்த நிலையில் அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும் இது குறித்து மாநில அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது கருத்தை தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்