இதனிடையே இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் எந்தெந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தருமபரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.