நாடு முழுவதும் மதுக்கடைகளை திறந்த மத்திய அரசை ரஜினி எச்சரிப்பாரா? ரவிக்குமார் எம்.பி

திங்கள், 11 மே 2020 (07:32 IST)
நாடு முழுவதும் மதுக்கடைகளை திறந்த மத்திய அரசை ரஜினி எச்சரிப்பாரா?
நாடு முழுவதும் மதுக்கடைகளை திறக்கலாம் என அனுமதி அளித்த மத்திய அரசை ரஜினி எச்சரிப்பாரா? மத்தியில் ஆளும் பாஜக அரசைப் பார்த்தும் இதே எச்சரிக்கையை ரஜினி செய்ய வேண்டும் என  ரவிக்குமார் எம்.பி கூறியுள்ளார்.
 
தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்ட நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து தமிழக அரசு இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது
 
தமிழக அரசின் மேல்முறையீடு குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். அவரது டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தனது டுவிட்டில் ‘இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்’ என்று தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் ரஜினி என்ன செய்தாலும் அதில் குறை கூறும் ஒரு சிலர் தமிழக அரசை அவர் எச்சரிக்கை விடுத்ததையும் குறைகூறி வருகின்றனர். இந்த நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் எம்பி ரவிகுமார் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் விவகாரம் குறித்த ரஜினிகாந்த் அவர்களின் அறச்சீற்றம் உண்மையென்றால் நாடு முழுவதும் மதுக்கடைகளை திறக்கலாம் என அனுமதி அளித்த மத்தியில் ஆளும் பாஜக அரசை பார்த்தும் இதே எச்சரிக்கையை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்