தமிழக பாடத்திட்டத்தில் கொரோனா வைரஸ் சேர்க்க ஆலோசனை !

சனி, 9 மே 2020 (14:57 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்டமாக மேலும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 59,662 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,981 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 17,847 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 19,063 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 7,402 பேரும், டெல்லியில் 6,318 பேரும், ராஜஸ்தானில் 3,579 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,341 பேரும், தமிழகத்தில் 6,009 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகையே பெரும் அச்சிறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கும் கொரோனா வைரஸ் குறித்து, தமிழக பாடப்புத்தகத்தில் கொரோனோ வைரஸ் 12 ஆம் வகுப்பு நுண்ணுயிரியல் பாடத்தில் மருத்துவ வைராலஜி என்ற தலைப்பில் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 6 முதல் 11ஆம் வகுப்பு பாடத்திட்டத்திலும் சேர்க்க ஆலோசனை என தகவல் வெளியாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்