டெல்லி கலவரம் எதிர்க்கட்சிகளின் சதி: ரஜினி சகோதரர் சத்தியநாராயணா

புதன், 26 பிப்ரவரி 2020 (15:36 IST)
டெல்லி கலவரம் எதிர்க்கட்சிகளின் சதி:
டெல்லியில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பயங்கர வன்முறை ஏற்பட்டு கடந்த 3 நாட்களாக வன்முறை கலவரம் ஆகியுள்ள நிலையில் இந்த வன்முறைக்கு காரணம் ஒரு சில பாஜக தலைவர்களின் வன்முறையை தூண்டும் பேச்சு தான் என சற்று முன் டெல்லி நீதிமன்றம் கண்டித்துள்ளது
 
இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் அவர்கள், டெல்லி கலவரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த போது இந்த கலவரம் முழுக்க முழுக்க எதிர்க்கட்சிகள் அல்லது வேறு சிலரால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் அமெரிக்க அதிபரின் வருகையின் போது இந்தியாவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற சதிதான் இந்த கலவரத்துக்கு காரணம் என்றும் கூறியுள்ளார். ரஜினியின் சகோதரர் சத்யநாராயணன் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மேலும் குடியுரிமை சீர்திருத்த சட்டத்தை பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் குடியுரிமை சட்டத்திற்கு தான் முழு ஆதரவு அளிப்பதாகவும் இந்த சட்டத்துக்கு எதிரான பிரச்சனைகள் அனைத்தும் ஒரு சில நாட்களில் சரியாகிவிடும் என்று அவர் தெரிவித்தார்
 
மேலும் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் இதுகுறித்து கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் அளித்தார் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்